Friday, May 11, 2012

தேவனின் கிருபை அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 71

அனுப்பியவர் டான் ஜூவான் .... இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் ஒரு கிராமத்துல மிஷனரிகள் நடத்தும் ஒரு ஆஸ்பத்திரியில் உண்மையான நோயாளிகளைவிட அங்குள்ள வசதிகளை இலவசமாக அனுபவிக்க சோம்பேறிகளும் அயோக்கியர்களுமே அதிகமாக இருந்தார்கள் .... எல்லாருக்கும் ஏதாவது ஒரு நோயோ ஒரு குறைபாடோ இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள் .... இவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக உண்மையான நோயாளிகளுக்கு இடமில்லாமல் போயிற்று .... அந்த ஆஸ்பத்திரிக்குப் பொறுப்பிலிருந்த பாதிரியாரும் அவப்போது வைத்தியம் செய்தற்கு வந்துபோகும் டாக்டரும் இதை நிறுத்த எதுவும் செய்யமுடியவில்லை .... அப்போது ஒரு சமூக சேவகருக்கு ஒரு ஐடியா தோன்றியது .... அதைப் பாதிரியாரிடம் பகிர்ந்துகொண்டபோது அவரும் “சரி இந்த ஞாயிறு வழிபாட்டின் போது செய்துபார்த்துவிடலாம்” என்று ஒப்புக்கொண்டார் .... ஞாயிற்றுக்கிழமை ஸெர்மன் முடிந்ததும் “நமது மிஷனின் தலைமையிடத்திலிருந்து இன்று அங்கு நாம் நடத்தும் ஆஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் ஒரு பாதிரியார் வந்துள்ளார் .... அவர் உங்களைப் பரிசோதித்து வைத்தியம் செய்வார்” என்றார் .... சமூக சேவகர் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் பாதிரியார் டிரஸ்ஸில் எழுந்து நின்றார் .... “இங்கு உங்களைக் குணப்படுத்தப்போவது நானல்ல .... தேவனின் கிருபை இருந்தால் இயலாதது என்று எதுவுமே கிடையாது ஏசுபிரான் சொன்னதை நினைவுகூருங்கள் “ .... கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் உங்களால் இயலாதது எதுவுமில்லை .... ” அனைவரும் எழுந்து ‘ஆமன்’ என்றனர் .... “தேவனின் கிருபையால் நோயுற்றவர்களின் நோய் நீங்கும் .... உடலில் குறைபாடுகள் உள்ளவர்களின் குறைகள் நீங்கும் .... தேவனின் மேல் முழு நம்பிக்கை வத்து இங்கு மேடைக்கு அனைவரும் ஒவ்வொருவராக வாருங்கள் .... உங்களில் யாருக்கு மிக அதிகமான வியாதியோ குறையோ இருக்கிறதோ அவர் முதலில் வரட்டும் .... ” “நீங்கள் மேடைக்கு வரும்போது இன்னொன்றையும் நினைவு கொள்ளுங்கள் .... ஏசுபிரானின் உயிர்த் தியாகம் .... மனிதகுலம் வாழ்வதற்காகத் தம் உயிரையே அர்ப்பணித்துக் கொண்டார் நம் ஏசுபெருமான் .... .... இன்றும் நம் மாதாகோவில்களில் சிறப்பு வழிபாடுகளின் போது ‘திருப்பலி’ யாக ஒரு ரொட்டித் துண்டும் சிறிது ஒயினும் வழங்கப் படுகிறதே அதன் பொருள் என்ன- ஏசுபிரான் சொன்னார் “இந்த ரொட்டி எனது உடலாகிய மாம்சம் .... இந்த ஒயின் எனது உயிராகிய குருதி .... இதை உண்டால் நான் உங்களோடு ஒன்றிவிடுகிறேன் .... எனது உயித் தியாகத்துக்கு அதுவே பொருளும் பயனுமாகும்” அனைவரும் எழுந்து ‘ஆமன்’ என்றார்கள் .... “ஆகவே உங்களில் முதலில் வருபவர் நோய் அல்லது குறைபாட்டினை மிகுதியாக உடையவர் மற்றவர் நலனுக்காக தன்னைத் தியாகம் செய்துகொள்ளத் தயாராக வாருங்கள் .... அவரை பலிபீடத்தில் பலியிட்டு அவர் உடலையும் ரத்தத்தையும் மருந்தாக அரைத்து மற்றவர்களுக்கு வழங்குவோம் .... அவர் உயிர்த் தியாகி என்று போற்றப் படுவார் .... வாருங்கள் மேடைக்கு .... ’ என அழைத்தார் .... அங்கு குழுமியிருந்த எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக ‘எனக்கு தேவனின் கிருபையால் இப்போதே குணமாகிவிட்டது’ என்று சொல்லி வெளியே விரைந்தனர் .... கடைசியில் எஞ்சியிருந்தது அந்தப் பாதிரியாரும் சமூக சேவகரும் படுத்த படுக்கையாக இருந்த உண்மையான நோயாளிகளும் மட்டுமே .... ஸ்டெத்தயும் பாதிரியார் உடுப்பையும் திரும்பக் கொடுத்து “தேவைப் படும்போது கூபிடுங்கள் ஃபாதர் .... நல்லவர்களைக் காப்பாற்ற கடவுள் அவ்வப்போது அவதரிப்பார் ‘பரித்ராணாய சாதூனாம் … சம்பவாமி யுகே யுகே” என்று பைபிள் சொன்னவாயால் பகவத்கீதையும் சொல்லி உத்தரவு பெற்றுக் கொண்டார் .... .... 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் .... செய்வீர்களா- 9 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment